Mai 9, 2024

துணைவேந்தர் கணக்கு முடிந்தது; மாணவர்கள் மீது ஜே.சி.பி இயந்திரத்தை ஏற்றுமாறு மிரட்டிய விஸ்வநாதன் காண்டீபன் தலைமறைவு

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடைக்கப்பட்டமையானது பல்கலைகழக மாணவர்கள் மத்தியிலும் உலக வாழ் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து மாணவர்கள் உண்ணாவிர போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில் பல்கலைகழக துணைவேந்தர் இதற்காக மன்னிப்பு கோரியதுடன், மீளவும் நினைவுத் தூபியை அமைப்பதற்கு இன்றையதினம் பல்கலைகழக வளாகத்தினுள் அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பதற்கு முன்னின்று செயலாற்றிய பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் , அதை தடுக்க முற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் மீது பொக்கோ இயந்திரத்தை ஏற்றுமாறு கூறியதுடன் மாணவர்களையும் மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் தமிழனாக பிறந்து தமிழ் மக்களின் உணர்வுகளை மதியாததோடல்லாமல் , மாணவர்கள் மீது ஜே.சி.பி இயந்திரத்தை ஏற்றுமாறு மிரட்டிய விஸ்வநாதன் காண்டீபன் மாணவர்களிடமும் தமிழ் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.