Mai 11, 2024

நாங்கள் வரலாற்றை அழிக்க மாட்டோம் – பிரஞ்சு அதிபர்

பிரான்சின் காலனித்துவ கால சர்சைக்குரியவர்களின் சிலைகள் ஒருபோதும் அகற்றப்படாது என பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக வழங்கிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்:-
இனவெறிக்கு எதிராக நிற்பதற்கு உறுதிபூணுவதாகவும், வேறு நாடுகளில் நடந்தது போன்று பிரான்சின் காலனித்துவ கால சர்சைக்குரியவர்களின் சிலைகள் ஒருபோதும் அகற்றப்படாது என பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் அடிமை வர்த்தகம் அல்லது காலனித்துவ தவறுகளுடன் பிணைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்ட நிலையில், பிரஞ்சுக் குடியரசு அதன் வரலாற்றிலிருந்து எந்த தடயத்தையும் அல்லது எந்த பெயரையும் அழிக்காது. அது எந்த சிலையையும் கழற்றாது என்றார் மக்ரோன்.
நாங்கள் யார் என்பதை மறுப்பதற்கு பதிலாக உண்மை என்ற குறிக்கோளுடன் ஆப்பிரிக்காவுடனான உறவுகள் உட்பட எங்கள் வரலாற்றை எல்லாம் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று மக்ரோன் கூறினார்.
இனவெறிக்கு எதிரான போராட்டம் பிரிவினைவாதிகளால் சிதைக்கப்பட்டுவிடுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.