Mai 6, 2024

ரணிலை எச்சரிக்கிறார் சுமா!

சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தேர்தல் திணைக்களத்தினால் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதை இலங்கை ஜனாதிபதியும், அரசாங்கமும் நிறுத்த வேண்டும்“ என  தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் அதிபர் ரணில் முன்வைத்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையில் அனைத்து அரச அதிகாரிகளும் தேவையற்ற மற்றும் நெறிமுறையற்ற அழுத்தங்களுக்கு உட்பட்டு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு இடம்கொடுக்காமல்,இருக்கவேண்டும்.அத்துடன் திட்டமிட்ட திகதியில் அரசியலமைப்பு ரீதியில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை செய்யுமாறு நினைவூட்டுகிறோம்.

இலங்கை மக்கள் எந்தவொரு தடையுமின்றி தமது உரிமையைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிப்பதற்கு சர்வதேச சமூகமும் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்கிறோம்.

அதன் மூலம், இலங்கையர்களின் சுதந்திரமும், ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

இலங்கையின் குடிமக்களும் வாக்குரிமைக்கான ஜனநாயக மற்றும் இறையாண்மை உரிமை குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாது எனவும் எம் ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert