Mai 2, 2024

402 தெரிவுக்காக 4111 பேர் :செல்வமும் அழைக்கிறார்

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் யாழ் உதவி தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்காக “13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ் மாவட்டத்தில் 486423 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமாக வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக் கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களுமாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிஇருக்கின்றது .

402 உறுப்பினர்கள் தெரிவிற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4111வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களுமாக 4111 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள் என அமல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் செல்வம் அடைக்கலநாதனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வீட்டுச் சின்னத்தை மீண்டும் ஏற்றுக்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்திருக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், தமிழரசிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert