Mai 2, 2024

தனது சிலையை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்பிபி… நடக்கப்போவதை முன்பே கணித்தாரா!?

ஆந்திரா சிற்பி ஒருவர் வடிவமைத்துள்ள எஸ்பிபி-யின் சிலை இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர். அங்கிருக்கும் தன்னுடைய பூர்வீக வீட்டை சில மாதங்களுக்கு முன்னர் தான் காஞ்சி சங்கரமடத்துக்கு வேதப்பள்ளி அமைக்க தானமாக கொடுத்தார். தனது அம்மாவின் சிலையை நிறுவ விரும்பிய எஸ்பிபி ஆந்திராவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி ராஜ்குமாரிடம் ஆர்டர் கொடுத்துள்ளார்.

அம்மாவின் சிலையைப் பார்த்ததும் ஈர்க்கப்பட்ட எஸ்பிபி தனது சிலையையும் செய்யுமாறு ராஜ்குமாரிடம் கேட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக நேரில் செல்ல முடியாததால் தன்னுடைய புகைப்படங்களை மட்டும் அனுப்பி வைத்துள்ளார்.

எஸ்பிபி தனது சிலையை தனது ரெக்கார்டிங் தியேட்டரில் நிறுவ திட்டமிட்டிருந்தார், சிலை தயாரானதும், வடிவமைப்பைக் கண்டு ராஜ்குமாரையும் பாராட்டியுள்ளார்.

தற்போது, சிலை செய்து முடிக்கப்பட்டு, இறுதிகட்ட பணிகளை சிற்பி செய்து வரும் நிலையில், எஸ்.பி.பி.யின் உயிர்பிரிந்தது. தனது மரணத்தையும் முன்கூட்டியே உணர்ந்து, சிலை வடிவமைக்க ஆர்டர் கொடுத்திருந்தாரா எஸ்.பி.பி. என ரசிகர்கள் கருத்து ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். ராஜ்குமார் வடிவமைத்துள்ள அந்த சிலை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஸ்பிபியின் சிலை நெல்லூரில் உள்ள வேத பள்ளியில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.