Mai 10, 2024

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த கோரி வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த கோரி வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் சமாசங்களும், மீனவர் சங்கங்களும் இணைந்து இன்றைய தினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து ஆரம்பித்து யாழ் இந்திய துணைத்தூதுவர் அலுவலகம்வரை பேரணியாக சென்று இந்திய தூதுவரிடம் மகஜர் கையளிக்கவுள்ளார்கள் குறித்த போராட்டத்தில் வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும்மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர்.

இந்திய அரசிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரிய படுத்துவதாகவும் எனினும் வேண்டுமென்று இந்திய மீனவர்கள் இப்பகுதிக்கு வருவதில்லை எனவும் ஏற்கனவே இந்த விடயங்கள் தொடர்பில் பலதடவை கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பில் மீண்டும் இந்திய மீனவர்கள் மத்தியில் இது தொடர்பில்விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் தெரிவித்திருந்தார்

தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் அலுவலகத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றதோடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியிடம் சட்டவிரோத மீன்பிடி களை நிறுத்தவேண்டும் இந்தியன் அத்துமீறிய மீனவர்களின் வருகையை நிறுத்த வேண்டும் போன்ற ஏழு கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மீனவ சங்கத்தினர் கையளித்தனர்