Mai 6, 2024

சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் இன்றைய கோவிட் 19 க்கான செய்தியில்

சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் இன்றைய கோவிட் 19 க்கான செய்தியில், சுவிஸ் நாட்டுக்குள் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறைகளும், கட்டுப்பாட்டு நிபந்தனைகளும் என்று ஒரு சில விடயங்களை வெளியிட்டிருக்கின்றது.
அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இந்த கட்டுப்பாட்டு நிபந்தனைகள் வரும் 14.09.2020 திங்கள் முதல் அமுலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
அத்தோடு சுவிசின் எல்லையுடன் அண்டியுள்ள அண்டைநாடுகளின் சில மாநிலங்களை தவிர ஏனைய மாநிலங்களில் இருந்து வருபவர்களோ அல்லது குறிப்பிட்ட சில மாநிலங்களை தவிர ஏனைய மாநிலங்களுக்கு சென்று திரும்பும் சுவிஸ் மக்களோ தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி சுவிசுக்குள் உட்பிரவேசிக்கலாம். சுவிஸ் நாட்டின் எல்லையை அண்டியுள்ள அண்டைநாட்டு பிரதேசங்களில் இருந்து வருவோருக்கு இந்த கட்டுப்பாட்டு நடைமுறைகள் முற்றாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஆபத்து நிலவும் நாடுகள் என்று சுவிஸ் அரசால் குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகளுக்கு சென்றுவரும் மக்கள், கொரோனா தொற்று ஆபத்து இல்லாத நாடுகளினூடாக வரும்பொழுது அந்த நாடுகளில் சிலகாலம் தங்கிவிட்டு வரும் பட்சத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சில நாட்களுக்குள் தளர்த்தப்படலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.
அனைத்து மக்களும் தங்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களாக இருக்கவேண்டும். தடை செய்யப்படட பிரதேசங்களுக்கு சென்றுவருபவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்தல்களுக்கு தங்களை உட்படுத்தி தங்களையும் மற்றவர்களையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
மேலும் பின்வருவோருக்கும் கொரோனா தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டு விதிகள் விலக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1. சமூக கலாசார நிகழ்வுகளுக்கு சென்றுவருபவர்கள்
2. விளையாட்டு போட்டிகளுக்கு சென்றுவரும் வீரர்களும் வீராங்கனைகளும்
3. விசேட மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக வருபவர்கள்.
பின்வரும் பட்டியலில் உள்ள நாடுகளும், அண்டைநாட்டு மாநிலங்களும் 14.09.2020 இலிருந்து கொரோனா தொற்று ஆபத்து பிரதேசங்களாக சுவிஸ் நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகளின் பட்டியல்:
Albanien
Andorra
Argentinien
Armenien
Aruba
Bahamas
Bahrain
Belize
Besetztes Palästinensisches Gebiet
Bolivien
Bosnien und Herzegowina
Brasilien
Britische Jungferninseln
Cabo Verde
Chile
Costa Rica
Dominikanische Republik
Gibraltar
Guyana
Honduras
Indien
Irak
Israel
Katar
Kolumbien
Kosovo
Kroatien
Kuwait
Libanon
Libyen
Malediven
Malta
Moldova
Monaco
Montenegro
Namibia
Nordmazedonien
Panama
Paraguay
Peru
Rumänien
San Marino
Sint Maarten
Spanien
Suriname
Trinidad und Tobago
Tschechien
Turks- und Caicos-Inseln
Ukraine
Vereinigte Arabische Emirate
Vereinigte Staaten von Amerika (inklusive Puerto Rico, Amerikanische Jungferninseln und Guam)
கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள பிரான்ஸ் நாட்டு மாநிலங்கள்:
Region Centre-Val de Loire
Region Corse
Region Hauts-de-France
Region Île de France
Region Normandie
Region Nouvelle-Aquitaine
Region Occitanie
Region Pays de la Loire
Region Provence-Alpes-Côte d’Azur
Überseegebiet Französisch-Guyana
Überseegebiet Guadeloupe
Überseegebiet Französisch-Polynesien
Überseegebiet La Réunion
Überseegebiet Martinique
Überseegebiet Mayotte
Überseegebiet Saint-Barthélemy
Überseegebiet Saint-Martin
கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள ஆஸ்திரியா நாட்டு மாநிலங்கள்:
Bundesland Wien