Mai 19, 2024

கம்பரெலிய தடை:கூட்டமைப்பிற்கு ஆப்பு!

தேர்தலில் வாக்கு வங்கிக்கு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பியிருக்கும் கம்பரெலிய பதாதைகளிற்கும் ஆப்படிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரெலியா பதாதைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் ஆகிவற்றை அகற்றுவதற்கு, எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வீதிகளில் வேட்ப்பாளர்களின் பெயர்களை வரைவது, தேர்தல் சட்டத்துக்குவிரோதமான செயற்பாடெனவும் இதனை மீறுபவர்கள் மீது தேர்தல் சடடத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் கூறினார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பதாகைகள் பொது இடங்களில் காணப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்றுமாறு, பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதென்றார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் கம்பரெலிய திட்டத்தின் போது நடப்பட்டுள்ள பதாகைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்களை, ஸ்டிக்கர் ஊடாக மறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதெனவும், அவர் கூறினார்.
கூட்டமைப்பின் பெருமளவிலான பிரச்சாரம் கம்பெரலிய சாதனையினை முன்னிறுத்தி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.