Mai 3, 2024

மங்களவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன திசாநாயக்க விடுத்துள்ளார்.