Mai 3, 2024

இந்தியாவை வீழ்த்த திட்டம் போடும் சீனா-பாகிஸ்தானை கதிகலங்க வைக்கும் தமிழன்!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிச்சயமாக இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதி நிதியும், தமிழருமான டிஎஸ் திருமூர்த்தி கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் என்பது உலகின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு கவுன்சில் ஆகும். இந்த குழுவில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது.

மற்ற 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராக 2 வருடங்களுக்கு ஒருமுறை தெரிவு செய்யப்படும்.

இந்தியா தற்போது இதில் நிரந்தர உறுப்பினராகவும் இல்லை. தற்காலிகமாக உறுப்பினராகவும் இடம்பெறவில்லை.

இந்த கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும் இந்தியாவை சீனா எதிர்த்து வருகிறது.

சீனா மட்டுமின்றி, பாகிஸ்தானும் இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதை எதிர்த்து வருகிறது.

இந்தியா தற்காலிக உறுப்பினர் கூட ஆக கூடாது என்று இரண்டு நாடுகளும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி கூறியுள்ளார்.

ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட பின் திருமூர்த்தி கூறுகையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த முறை நாம் கண்டிப்பாக இடம் பெறுவோம்.

10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிச்சயமாக நாம் இதில் உறுப்பினர் ஆக போகிறோம். ஏனெனில் 5 நாடுகளில் 75 சதவீத நாடுகள் நமக்கு ஆதரவாக வாக்கு அளிக்க உள்ளது.

இதற்கான பேச்சுக்கள் நடந்து வருகிறது. நம்முடைய குரலை உலகம் கேட்க வேண்டும். அதற்கான பணிகளை கண்டிப்பாக நான் செய்வேன்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சேருவதை இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையின் தீர்வாக நான் பார்க்க மாட்டேன். இந்தியாவிற்கு இதன் மூலம் அதை விட பெரிய பலன்கள் கிடைக்கும்.

இந்தியாவிற்கு குறுகிய பலன்களை விட பெரிய பலன்கள் இதனால் கிடைக்க போகிறது. இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் பொய்யான பிரச்சாரத்தை யாரும் கருத்தில் கொள்ளவில்லை.

இதனால் இந்தியா கண்டிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சேரும், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம், வேறு சில நாடுகளின் பொருளாதார ரீதியான தீவிரவாதத்தை நாங்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எதிரொலிப்போம்.

எங்களின் அவசர நோக்கம் என்பது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு தற்காலிக இடம் ஒன்றை பெறுவதுதான். வரும் 17-ஆம் திகதி இதற்கான தேர்தல் நடக்கிறது. இதற்காக உறுப்பு நாடுகள் உடன் பேசி வருவதாக கூறியுள்ளார்.

இந்த தேர்தலில் இந்தியா இதில் வெல்ல கூடாது என்று சீனா தீவிரமாக முயன்று வருகிறது. இதனால் உறுப்பு நாடுகளிடம் சீனா தீவிரமா பிரச்சாரம் செய்து வருகிறது

ஆனால் திருமூர்த்தி அதிரடியாக களமிறங்கி பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் இந்தியாவின் நட்பு நாடுகள் உடன் பேசி பிரச்சாரம் செய்து வருகிறார். சீனாவை இப்படி கதிகலங்க வைக்கும் திருமூர்த்தி தமிழகத்தை சேர்ந்தவர்.

ஆம் இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில்தான் இவர் காமர்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய இவர் 1985-ல் ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்வானார்.

இவர் பல நாடுகளின் இந்தியாவின் வெளியுறவுத்துறையில் பல பொறுப்புகளை வகித்து இருக்கிறார். கைரோ, ஜெனிவா, காசா, வாஷிங்க்டன், ஜகர்தா ஆகிய இடங்களில் இவர் வெளியுறவுத்துறை அதிகாரியாக பொறுப்பு வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.