Mai 17, 2024

அமெரிக்காவின் போர்க்குற்றங்களை விசாரித்த ஜ.சி.சி மீது பொருளாதாரத் தடை!

Judges are seen in the courtroom for the trial of the Congolese militia commander Bosco Ntaganda at the ICC (International Criminal Court) during his trial at the Hague in the Netherlands July 8,2019. REUTERS/Eva Plevier/Pool - RC1DC303C080

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் போர்க் குற்றங்களை மேற்கொண்டதா என விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச நீதிமன்ற ஊழியர்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை உத்தரவை விதித்துள்ளது.

இத்தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார். தனது நிறைவேற்று ஆணையை அறிவித்த டிரம்பின் அதிகாரிகள், நெதர்லாந்து ஹேக்கை தளமாகக் கொண்ட சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவின் தேசிய இறையாண்மையை மீறுவதாகவும் அச்சுறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.
அத்துடன் சர்வதேச நீதிமன்றம் மாஸ்கோவுக்கு சேவை செய்வதாகவும், ரஷ்யா அதைக் கையாண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சர்வதேச நீதிமன்றத்தால் எங்கள் மக்கள் அச்சுறுத்தப்படுவதால் நாங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க முடியாது என வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
உலகின் பல நெருங்கிய கூட்டாளிகளுக்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. உங்கள் மக்கள் அடுத்ததாக இருக்க முடியும். குறிப்பாக நேட்டோ நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்று அவர் கூறியதுடன் மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
நேட்டோ பாதுகாப்பு கூட்டணியின் உறுப்பினரான நெதர்லாந்தின் வெளியுறவு மந்திரி ஸ்டெஃப் பிளாக் கீச்சகத்தில் அமெரிக்க நிலைப்பாட்டால் „மிகவும் கலக்கம் அடைந்தார்“ என்று பதிவிட்டுள்ளார். அத்டன் சர்தேச நீதிமன்ற விசாரணைக்கு தனது நாடு ஆதரவளித்ததாகக் கூறினார். இது தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானது என்று அவர் விவரித்துள்ளார்.
இந்த உத்தரவின் கீழ் விதிக்கப்படக்கூடிய பொருளாதாரத் தடைகள், அமெரிக்காவின் அனுமதியின்றி அமெரிக்க குடிமக்களை விசாரிக்க அல்லது வழக்குத் தொடர சர்வதேச நீதிமன்றத்திற்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்குவதும், அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அமெரிக்காவிற்கு வருவதைத் தடுப்பதும் அடங்கும்.
இந்த அறிவிப்பில் வெளியுறவுத்துறை அமைச்சரோ அல்லது எந்த உயர் அதிகாரிகளோ கலந்து கொள்ளவில்லை. பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் மற்றும் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் கலந்துகொண்டனர். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை.
இந்த அறிவிப்பு குறித்து சர்வதேச நீதிமன்றம் உடனடியாக எதுவித  கருத்துக்களைவும் தெரிவிக்கவில்லை.
சர்தேச நீதிமன்ற சட்டவாளர் ஃபாதூ பென்சோடா (Fatou Bensouda) 2003 மற்றும் 2014 க்கு இடையில் நிகழக்கூடிய குற்றங்களை விசாரிக்க விரும்புகிறார்.
இதில் தலிபான்கள் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது, ஆப்கானிய அதிகாரிகளால் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது மற்றும் குறைந்த அளவிற்கு அமெரிக்கப் படைகள் மற்றும் சி.ஐ.ஏ உளவு அமைப்பினர் செய்த குற்றங்களும் அடங்கும்.
நீதிமன்ற விசாரணை மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.
ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றங்கள் நடந்திருப்பதாகவும், நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இருப்பதாகவும் நம்புவதற்கு நியாயமான காரணங்களை 2017 ஆம் ஆண்டில் சட்டவாளர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் விசாரிக்க சர்வதேச நீதிமன்றம் முடிவு செய்தது.
டிரம்பின் இந்த நடவடிக்கையை மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் வாஷிங்டன் இயக்குனர் ஆண்ட்ரியா பிரசோவ், இந்த நடவடிக்கை உலகளாவிய சட்ட விதிக்கு அவமதிப்பை நிரூபிக்கிறது என்றும், விசாரணைக்கான தடங்கலுக்கான அப்பட்டமான முயற்சியைப் பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.