Mai 2, 2024

செலவுகளுக்கு பணமில்லாமல் திண்டாடும் டிவி சானல் பிரபலம்!

கொரோனா உலகையே முடக்கி போட்டுவிட்டது. சில நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்களின் வாழ்வாதாரமும், உலக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிகப்பட்ட தொழில்களில் சினிமா, சீரியல் தொழிலும் ஒன்று. இதனை நம்பி வாழும் பல கலைஞர்களின் குடும்பங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த டிவி சீரியல் நடிகை நுப்பர் அலங்கரின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லையாம். இதனால் பணம் வங்கியில் எடுக்கப்படமுடியாத சூழ்நிலை உள்ளதாம்.

இந்நிலையில் அவரின் தோழி ரேணுகா ஷஹானே நுப்பர்க்காக ரசிகர்களிடம் சமூக வலைதளத்தில் பண உதவி கேட்டுள்ளார். தினசரி செலவுகளுக்கே பணமில்லாமல் நுப்பர் திண்டாடி வருகிறாராம்.