Mai 6, 2024

இந்திய எல்லைக்கு மிக அருகே வந்த சீனாவின் போர் விமானங்கள்!

இந்திய எல்லைக்கு மிக அருகே வந்த சீனாவின் போர் விமானங்கள்!

இந்தியாவின் லடாக் எல்லைக்கு அருகே இரண்டு சீன போர் விமானங்கள் வந்துவிட்டு சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.

எல்லையில் இரண்டு நாட்டு படைகளும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை எல்லையில் குவித்து வருகிறது.

முக்கியமாக லடாக் அருகே இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா படைகளை குவித்து வருகிறது.

இந்த பகுதியில் இருக்கும் நதி வழியாக லடாக் உள்ளே நுழைய சீனா கடுமையான முயற்சிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் இரண்டு போர் விமானங்கள் இந்திய எல்லைக்கு அருகே வந்துவிட்டு சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் J-11 மற்றும் J-7 போர் விமானங்கள் இந்திய எல்லைக்கு அருகே வந்து சென்றுள்ளது.

இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விமானங்கள் உளவு பார்க்க வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இதனால் அங்கு இந்திய விமானப்படை தற்போது தயார் நிலையில் உள்ளது.

சீனா விமானப்படை அத்துமீறினால் திருப்பி தாக்க தயாராக இந்திய விமானப்படை உள்ளது.

ஏற்கனவே சீனா எல்லையில் இருக்கும் லடாக் பகுதியில் சீனா போர் விமானங்களை குவித்து வருகிறது. இதற்காக சீனா தனது விமான படைத்தளத்தை விரிவாக்கி உள்ளது.

கடந்த மே 5ஆம் திகதி சீன ஹெலிகாப்டர் லடாக் எல்லையில் அத்துமீறியது. அதன்பின் எல்லைக்கு அருகே மீண்டும் சீன விமானம் லடாக் அருகே வந்திருப்பது பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.