Mai 3, 2024

இலங்கை:விமானப்படை உலங்குவானூர்திகள் வாடகைக்கு?

இலங்கையில்  பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை இடைநிறுத்த இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் விஜயங்களுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களை வழங்குவதற்கு இலங்கை விமானப்படைக்கு பொறுப்பு இருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது விமானப் பயணத்துக்காக இதுவரை 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் விமானப் படைக்கு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இலங்கை அமைச்சர் அனுராதபுரம் சிறைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளிற்கு கொலை மிரட்டல் விடுக்க விமானப்படை உலங்குவானூர்தியில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது

ஒரு ஹெலிகாப்டர் ஒரு மணி நேரத்துக்கு சுமார் ஐநூறு லீற்றர் எரிபொருளை பயன்படுத்து கின்றமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert