Mai 3, 2024

வடகொரியாவின் புதிய ஏவுகணை: அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை இன்று வியாழக்கிழமை பரிசோதித்தது.

இதுபற்றி ஜப்பானிய அதிகாரிகள் கூகூறும்போது:-

இந்த ஏவுகணை 1,100 கி.மீ.  தொலைவுக்கு பறந்து சென்றுள்ளது. அத்துடன் 6,000 கி.மீ.  உயரத்திற்கு பறந்து சென்றுள்ளது.  ஏவுகணையானது ஒரு மணிநேரம் பறந்து சென்று பின்பு ஜப்பானிய கடல் பகுதிகளில் விழுந்துள்ளது என தெரிவித்தனர்.

இந்த வகை ஏவுகணையானது அமெரிக்காவையும் அடைந்து தாக்க கூடிய வல்லமை பெற்றது.

கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக, தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தி உள்ளது என்று தென்கொரியாவும் உறுதி அளித்தனர்.  இந்த சோதனையானது ஐ.நா.வின் விதிகளை மீறிய செயல் என தென்கொரிய அதிபர் மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert