Mai 2, 2024

கோத்தாவிடம் இராணுவ சிந்தனையே எஞ்சியுள்ளது!

எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக் கொண்ட அரசு என காண்பித்துள்ளது.அத்துடன் இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக எஞ்சியிருக்கின்ற கோட்டபயவின் தோற்றுப்போன மனநிலையை உலகில் வெளிக்காட்டி நிற்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம். அவர்கள் தமிழ், சிங்கள மக்களை வதைத்து அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக உள்ளது

குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்போன மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றதெனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert