April 26, 2024

மட்டக்களப்பு முடிந்து திருமலை?

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்வர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராமத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இக்காணியை,  தொழில்நுட்ப குழு ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசு செய்ததையடுத்தே,  செயலணியாலும் சுகாதார அமைச்சாலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மையவாடியில் சுமார் 4,000 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான இட வசதியுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம். நிஹார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிககையில், “தற்போது மையவாடிக்கான உட்கட்டமைப்பு வசதிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மையவாடிக்குள் 14 உள் வீதிகள் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. மையவாடியைச் சூழ சுமார் 10 கிலோ மீற்றர் மதில் எழுப்பப்படவுள்ளது. மின்சார வசதிகள் மற்றும் ஜனாஸாக்களின் உறவினர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“ஓட்டமாவடி, மஜ்மா நகர் கொவிட் 19 மையவாடியின் நிலப்பரப்பு ஜனாஸாக்களால் பூரணமாகியுள்ள நிலையில், கிண்ணியா வட்டமடு கிராம மையவாடியை துரிதமாக ஏற்பாடு செய்யும்படி பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன” என்றார்.