Mai 17, 2024

அவுஸ்ரேலியா , நியூசிலாந்து பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.பிஜி, நியூசிலாந்து மற்றும் வனுவாட்டுவின் சில கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை எழுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனேசியாவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ரா தீவின் கடலோர பகுதியில், 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 அலகாக பதிவானது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்த பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.