Mai 9, 2024

அரசியல் அறத்தினை மீறாதீர்கள்! அனந்தியின் குற்றச்சாட்டு!!

அந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இடுவது மறுக்கப்பட்டமையானது, அரசியல் அறத்தினை மீறும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக, ஐ.நா விடயத்தில் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் சிவாஜலிங்கம், மூத்த அரசியல்வாதி மாவை.சேனாதிராஜா,  கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சர்வதேச விசாரணையை மறுதலிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது, அதனை வலியுறுத்தி கையொப்பமிட்டு கூட்டுக்கோரிக்கை விடுத்த சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் ஒதுக்கப்பட்டள்ளமையானது ஏற்புடையதாகாது என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைவிடவும் தனது கணவரை இராணுவத்திடத்தில் ஒப்படைத்தமை. போரின் நேரடிச் சாட்சியமாக இருக்கின்றமை உள்ளிட்ட பத்து காரணங்களை முன்வைத்து கையெப்பம் இடுவதற்கும் அதற்கான கோரிக்கை விடுப்பதற்குமான தகுதியைக் கொண்டிருப்பதாகவும் அவர் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.