Mai 9, 2024

FEED அமைப்பு வட கிழக்கு பகுதிகளுக்கான சேவையை சிறப்புற செய்து வருகின்றது இதற்காக நாங்களும் உதவிடுவோம்

எமது அமைப்பு 2016ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி ஊடான பொருளாதார அபிவிருத்திக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் குடும்ப பொருளாதாரம் குறைந்த கல்வியை தொடர முடியாத பல்கலைகழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு அத்தோடு ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆரம்ப கல்வி முன்னெடுப்புக்களுக்கான செயற்பாடுகளில் மாதாந்தம் அவரவர் தேவைக்கேற்ப எமது நிறுவனத்தினால் உதவிதொகை வழங்கி வரப்படுகின்றது.
இவ் உதவித்தொகையானது இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகின்றது. அதனடிப்படையில் 21 பல்கலைக்கழக மாணவர்களும் , 39 ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை வழங்குவதனூடாக 500 ற்கு மேற்பட்ட மாணவர்கள் எமது அமைப்பினூடாக பயன்பெற்று வருகின்றனர்.
தொடர்ந்தும் எமது நிறுவனம் பல மாணவர்களுக்கு கல்வி வசதியை இலகுபடுத்தி உதவுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
எமது நிறுவனத்துடன் சேர்ந்து உதவுவதற்கு விரும்பும் கொடையாளிகள் எம்மை தொடர்பு கொள்ளவும்..🙏
📞 0094 77 128 5711
(Whats App , Viber)