புதிய அணு மின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து பேச்சுவார்த்தை!

சஃபோல்க் நகரில் ஒரு புதிய £20 பில்லியன் மதிப்பிலான அணு மின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸ் நிறுவனத்துடன் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

அமைக்கப்படவுள்ள Sizewell C தளத்தில் 3.2 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும், இது பிரித்தானியாவின் மின்சாரத் தேவைகளில் 7 சதவீதத்தை பூர்த்தி செய்யப் போதுமானது என தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் எந்தவொரு ஒப்பந்தமும் பணத்திற்கான மதிப்பு மற்றும் மலிவு போன்ற பகுதிகளில் பலவிதமான ஒப்புதல்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என அரசாங்கம் கூறியுள்ளது.

மேலும் பேச்சுவார்த்தைகள், சீனாவின் General Nuclear Power-உடன் இணைந்து பிரான்சின் EDF நிறுவனம் கட்டமைக்கும் சோமர்செட்டில் உள்ள Hinkley Point C அணுசக்தி ஆலையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை தொடர்ந்தால், இதன் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டின் போது ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கக்கூடும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.