September 7, 2024

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.. அன்று இப்படியாகவே தமிழிழத்தின் தேசக்குரல் ஒலித்தது…. அதேபோல் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஒலிக்கிறது..புறச்சூழல் எங்கள் கரங்களில் ஆயுதங்களைத் திணித்தது அன்று ..ஆனாலும் அன்றைய. நாளில் அது கேள்விக்கும் விமர்சனங்களுக்கும் உட்படாமல் இருந்தது….
அது சரியானதாகவும் தென்பட்டது..ஆகவே இன்று அதனை கேள்விக்கு உட்படுத்தத் தேவையில்லை .ஆனாலும் எனக்கு ஆயுதத்தில் அந்த வழிமுறையில் நம்பிக்கையும் விருப்பமும் இல்லை ..ஆனாலும் அதன் தியாகங்களை மதிக்கிறோம்.அது ஈடு இணையற்ற ஒப்பற்ற ஒரு தியாகம்..அதனை எமது அரசியல் தேவைக்கு எனது வெற்றிவாய்ப்புக்கு பயன்படுத்துவதற்கு உரித்தோ உரிமையோ இல்லை..அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது..அந்த வழிமுறையில் எனக்கு உடன்பாடும் கிடையாது..என்ற உண்மையை மிகத்தெளிவாக நேர்மையுடன் நம்பிக்கையுடன் தெரியப்படுத்துகின்றேன்.,,.