கண்ணதாசனை வைத்து மலின அரசியல்?

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மீள் விசாரணைக்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் சில சட்டத்தரணிகள் அதனை தமது சாதனையாக்கி  அரசியலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியதென தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.
விரிவுரையாளர் கண்ணதாசன் ஆயுள் தண்டனை பெற்றமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டில் வழக்கை மீள் விசாரணை செய்ய
உத்தரவிடப்பட்டுள்ள போதும் அதனை தனது சாதனையாக சுமந்திரன் கூறிவருகின்றார்.
இதனிடையே யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் இன்று சனிக்கிழமை சந்தித்தனர்.