September 9, 2024

துயர் பகிர்தல் தியாகராசா இராசமலர்

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமலர் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சரவணமுத்து, அன்னம்மா(யூனியன் பேக்கரி- சாவகச்சேரி) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி(கனடா), கெங்காதேவி(லண்டன்), இராதாக்கிருஷ்ணன்(லண்டன்), சுரேஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கந்தசாமி(கனடா), ஜெயரத்தினம்(லண்டன்), விமலேஸ்வரி(லண்டன்), வாசுகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மகாதேவன் மற்றும் துரைசாமி(கொழும்பு), கமலாதேவி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற உமாதேவி மற்றும் சிதம்பரேஸ்வரி(பேபி- கொழும்பு), நாகரசா(கொழும்பு), மார்க்கண்டு(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான தருமரத்தினம், முத்துக்குமாரசாமி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜானி(கனடா), காலஞ்சென்ற கௌசிகா(கனடா), சங்கர், ராம், சுந்தர், விஷ்ணுகா(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தனுஷன், தனியா(லண்டன்), ஜனதன், நிலந்தன், அனிக்கா(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கல்டன்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

சுமதி – மகள்

 

கெங்கா – மகள்

 

ராதா – மகன்

 

சுரேஸ் – மகன்