April 30, 2024

திருகோணமலை மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில்!

திருகோணமலையில் விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை ஐந்து தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது ஐந்து மாணவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

சுடரேற்றிய பின்னர் கருத்து தெரிவிக்கையில், 

தமிழ் இனப் படுகொலை உட்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்கான குற்றவாளிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியைப் பெறத் தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் , இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசிய இனம் தனக்கே உரித்தான சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமா? சுயாட்சியா? என்ற பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த முன் வருமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.   

கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குக்காக கூடியிருந்த ஜந்து மாணவர்களை விசேட அதிரடிப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert