Mai 4, 2024

2வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இஸ்ரேல் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையிலும், போரில் ஈரான் உள்ளிட்ட பிறநாடுகள் பங்கேற்கக்கூடாது என எச்சரிக்கும் வகையிலும் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்டை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா கடந்த 10 ஆம் திகதி அனுப்பி வைத்தது. 

இந்நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை மேலும் உறுதி செய்யும் வகையில், இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் மேலும் சில போர்க்கப்பல்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடலில் நிலைநிறுத்தப்படுகின்றன

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert