நாளையும் தையிட்டியில் போராட்டம்!


யாழ்ப்பாணம் தையிட்டியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ, எதுவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாதென மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்லாகம் நீதிமன்றம் இன்று மாலை விதித்துள்ள கட்டளையிலேயே நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, ஒவ்வொருவரும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும் அல்லது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியும். எனினும் குறித்த உரிமைகளை அனுபவிக்கும் போது விகாரையின் முகப்பிலோ அல்லது பாதையிலோ தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே நாளை வெள்ளிக்கிழமை இறுதி நாள் போராட்டத்திற்காக தையிட்டிக்கு அனைவரும் அணிதிரளுமாறு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராகவும், தனியாருடைய காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனீர்ப்புப் போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

போராட்டத்தை தடைசெய்வதற்கான உத்தரவினைக்கோரி நீதிமன்றுக்கு காவல்துறை சென்றிருந்த நிலையில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்காமல்; ஜனநாயகரீதியான போராட்டங்களை நடாத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதியளித்;துள்ளது.

இன்று வியாழக்கிழமை இரவு தொடரும் போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை தொடருமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினாலே ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தவும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கவும் ஆத்துமிறி கட்டப்பட்ட விகாரையை அப்புறப்படுத்தவும் முடியுமெனவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert