Mai 4, 2024

கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். 

2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை,நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த காலங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இம்முறை பெருமளவான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். 

அதேவேளை தமிழகத்தில் இருந்தும் இம்முறை பெருமளவான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கச்சத்தீவை வந்தடைந்துள்ளனர். 

உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான இன்றைய தின இரவு உணவு, நாளைய தினத்திற்கான காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert