Mai 1, 2024

ஜேர்மனியில் கொரோனா விருந்தை முடித்துவைத்த காவல்துறையின் காவல்நாய்.

ஜேர்மனி கொலோன்(Köln) – கொலோன்-கோர்வைலர் நகரில் சனி இரவு கடந்து ஞாயிற்றுக்கிழமை ஒரு கொரோனா விருந்தை எனொக்ஸ் என்ற காவல் நாயின் உதவியுடன் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அயலவர்கள் நள்ளிரவுக்கு சற்று முன்னர் குறித்த பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பலத்த சத்தத்துடன் வெளிவந்துகொண்டிருந்த இசையைப் பற்றி காவல்துறை அவசர அழைப்புக்கு புகாரளித்திருந்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டு வாசலில் அழைப்பு மணியை அழுத்தியபோது போதையில் கொண்டாட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக இருந்தனர்.
இதனால் எனொக்ஸ் என்றகாவல்துறை காவல்நாய் உதவிக்கு அழைக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வரவளைக்கப்பட்டது.
நாய் கையாளும் ஒரு பெண் காவலரை தாக்க விருந்தில் கலந்துகொண்ட ஒரு மனிதன் ஏதோ ஒரு பொருளை அவர் மேல் வீசியபோது, அதை தடுத்த ​​ காவல் நாய் அந்த மனிதனின் கையை பாய்ந்து கடித்து. கொரோனா விருந்தை முடிவுக்கு கொண்டுவந்து.