September 7, 2024

நல்லூர் பிரதேச சபையில் குழப்பம் – அழைக்கப்பட்ட பொலிசார்

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

நல்லூர் பிரதேச சபையினரால், பாவிக்கப்பட்ட பொருட்கள் இன்றைய தினம்(புதன்கிழமை) ஏலம் விடப்பட்டது.

அதன் போது ஏலம் எடுக்க வந்த சிலர் பிரதேச சபையினருடன் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிஸார் அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert