Mai 3, 2024

கோத்தவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய மக்கள் சக்தி போராட்டத்தை தடுக்க முற்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினர்

கோத்தவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய மக்கள் சக்தி போராட்டத்தை தடுக்க முற்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினர் என தெரியவருகின்றது.

அருண் சித்தார்த் தலைமையில் வருகை தந்திருந்த கமால் குணரட்ணவின் கீழ் செயற்படும் புலானய்வு பிரிவே தடை செய்ய முற்பட்டமை தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டன.

இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு ஐனாதிபதிக்கு ஆதரவாக குழுவொன்று குரல் எழுப்பிய வேளை முறுகல் நிலை உருவானது.

முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது.  பதற்றத்தை  தணிப்பதற்காக பொலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததுடன் குழப்பவாதிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் அனுப்புவதற்கு முயற்சித்த வேளை போராட்டக்காரர்கள் முச்சக்கர வண்டியையும் முற்றுகையிட்டனர். பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பொலிஸார் முச்சக்கர வண்டியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert