April 28, 2024

கோத்தாவிடம் ஒன்றுமில்லை:அமைச்சரே ஒத்துககொண்டார்!

பொருளாதார வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் பணியில் எதிர்க்கட்சியினரையும் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்திளாசர் சந்திப்பில் அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், பொருளாதார வேலைத் திட்டமொன்று இருக்கிறதா என்பது குறித்தும் ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதன்மூலம் அரசாங்கத்திற்கு இன்னமும் பொருளாதார வேலைத் திட்டமொன்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இலங்கை பொருளாதார ரீதியாக நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அரசாங்கத்திற்கு இன்னமும் பொருளாதார வேலைத் திட்டமொன்று இல்லை என்பது பொருளாதார நெருக்கடியை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.