April 27, 2024

துப்பாக்கி முனையில் பிரான்ஸில் துணிகர கொள்ளை

 

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள முன்னணி நகை விற்பனை நிலையத்தில், திரைப்படப்பாணியில் பரபரப்பாக இடம்பெற்ற 3 மில்லியன் யூரோ நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 24 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட நகைகளுடன் பிரான்சைவிட்டு சேர்பியாவுக்கு தப்பிச்செல்ல முயன்றபோதே இரண்டுபேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

துரொத்நெத் எனப்படும் பாதவண்டியில் சென்ற கொள்ளையர்களே கைத் துப்பாக்கி முனையில் விலைமதிப்பற்ற இரத்தினக்கற்கள் மற்றும் நகைககள் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வாடிக்கையாளர் போல் பாசாங்கு செய்துகொண்டிருந்த சந்தேகநபர், திடீரென துப்பாக்கியை காண்பித்து ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், பெறுமதிக்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

02 மில்லியன் தொடக்கம் 03 மில்லியன் யுரோ பெறுமதியான நகைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

எனினும் கணிசமான கொள்ளையிடப்பட்ட ஆபாரணங்களுடன், நாட்டின் கிழ்க்கு பகுதியில் வைத்து பொலிஸார் இருவரை கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட ஒரு பகுதி நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மொண்டிநீக்குரோவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும், ஜெர்மனியுடனான பிரான்ஸ் எல்லையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுதக் கொள்கை குற்றச்சாட்டில் இருவரும் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.