மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறும் நேரம்?

இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கம் எனும் நாடகத்தை இலங்கை அரசு அரங்கேற்ற தொடங்கியுள்ளது.

ஏற்கனவே பளை பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட பளை மாவட்ட வைத்தியசாலை மருத்துவர் சிவரூபன் உள்ளிட்டவர்கள் ஒருவருடம் கடந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் போராளிகளை கைது செய்து வேட்டையாடி வந்த இராணுவத்தினர் முன்னாள் போராளிகளான கணவனும், மனைவியையும் குழந்தை ஒன்றுடன் கைது செய்துள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.

கிளைமோர் குண்டு ஒன்றை பேருந்தில் எடுத்துச்சென்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் போராளிகளான கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்லும் பேருந்தில் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டுடன் முன்னாள் போராளிகள் இருவர் தமது குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

2009 பி;னனராக வருடந்தோறும் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து முன்னாள் போராளிகள் கைதாகிவருவது குறிப்பிடத்தக்கது.