இயக்கச்சியில் படையினர் சுற்றிவளைப்பு!

மாங்குளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக கிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீடு படையினரால் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

எனினும் கைது செய்யப்பட்டவர் தொடர்பான முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கனவே பளையில் இடம்பெற்ற வெடிவிபத்தில் காயமுற்ற முன்னாள் போராளியொருவர்  சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருந்தார்.

அவரது வீட்டில் மீட்கப்பட்ட வெடிபொருளின் மாதிரியை ஒத்ததாக மாங்குளத்திலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இவ்வெடிப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இரு இளைஞர்கள் கைதாகியிருந்தமை தெரிந்ததே.