மஹர சிறைச்சாலை: மரணம் 9

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை

9 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் கடந்த 8 நாள்களாக கூரைமீதேறி போராட்டத்தை  முன்னெடுத்து வந்த கைதிகள், இன்று காலை தமது போராட்டத்தை கைவிட்டு, கூரையிலிருந்து இறங்கியுள்ளனர்.

குறித்த சிறைச்சாலையின் 15 கைதிகள் ‚A‘ மற்றும் ‚C‘ கூடங்களின் கூரை மீதேறி நவம்பர் மாதம் 23ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமது வழக்குகளை துரிதப்படுத்தல், பிணையில் விடுவித்தல் உள்ளிட்ட பல்வேற கோரிக்கைகளை முன்வைத்து, இக்கைதிகள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் ‚C‘ சிறைக்கூடத்தின் கூரைமீதேறி போராட்டத்தை முன்னெடுத்த 10 கைதிகளும் 26ஆம் திகதி தமது போராட்டத்தை கைவிட்ட நிலையில்,ஏனைய 5 கைதிகள் மாத்திரம் 8ஆவது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், இன்று கைவிட்டுள்ளனரென சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.