தனுஷின் 43 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்!

நடிகர் தனுஷின் 43 ஆவது திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் ஆல்பமாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது தனுஷின் 43வது படத்திற்கு மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் நான்காவது பாடலையும் கம்போஸ் செய்யும் பணியில் தற்போது இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் ஆல்பமாக வெளியாகும் என்றும் அந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்றும் ஜீவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.