கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான்!

.கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியிலுள்ள மாரிமுத்து ஆறுமுகம் என்ற விவசாயியின் வீட்டிலேயே குறித்த மழைக்காளான் முளைத்துள்ளது.

குறித்த காளானை உணவுக்காக பயன்படுத்துவதாகவும், அதனை பிடுங்கும்போது 3.5 கிலோ எடையில் அது காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் ஓர்வகை பூச்சி தாக்கம் உள்ளதால் உணவுக்கு பயன்படுத்தாது பார்வைக்காக கடையில் வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக வீடுகள், வயல்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான காளான்களே மழை காலங்களில் அவதானிக்க முடியும். 3.5 கிலோ எடையில் மழைக்காளான் அடையாளம் காணப்பட்டமையானது அப்பிரதேசத்தில் இதுவே முதல் தடவையாகும்.