ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்!

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.