போலி அறிக்கை:மறுதலித்தார் துணைவேந்தர்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்மந்தமாகப் பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், பல்கலைக்கழக ஒழுக்காற்றுக் குழுவின் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என துணைவேந்தர் மறுதலித்துள்ளார்.

குறித்த அநாமதேய அறிக்கை ஒழுக்காற்றுக் குழுவின் முழுமையான அறிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களைத் துறை ரீதியாகப் பெயர் குறிப்பிட்டும், மாணவர்களை இனங்காட்டியும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீதான நம்பகத் தன்மையைப் பாதிப்பதாகவும் அமையக் கூடாது எனத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

ஈபிடிபி அமைப்பின் புதிய முக்கியஸ்தரான கோடீஸ்வரன் றுசாங்கன் என்பவர் பல்கலைக்ககழக பேரில் விடுத்த போலி ஊடக அறிக்கை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில் குறித்த மறுப்பு அறிககை வெளியிடப்பட்டுள்ளது.