September 10, 2024

திரையரங்க வாசலில் கலாநிதி சற்குணராசா?

 

தன்னை கேள்வி கேட்கமுடியாதெனவும் வானளாவிய அதிகாரம் தன்னிடமிருப்பதாகவும் பிரஸ்தாபித்துக்கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி.சிறீசற்குணராசாவும் கதிரையினை காப்பாற்றி கொள்ள சிறீதர் திரையரங்கினுள்  மடங்கிப்போனமை விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் சிறீதர் திரையரங்க பணிமனையிலிருந்து செயற்பட தொடங்கியுள்ளதாவென வடக்கு கல்வி சமூகம் பெரும் அதிர்ச்சியுடன் கேள்வியை எழுப்பியுள்ளது.

முன்னாள் துணைவேந்தரான பாலசுந்;தரம்பிள்ளை காலை மற்றும் மாலையென சிறீதர் திரையரங்கில் ஞானஸ்தானம் பெற்று தனது பணியை ஆற்றி வந்திருந்தமை அப்போது  நையாண்டியாக பேசப்பட்டு வந்தது.

ஆனாலும் அதன் பின்னராக பதவியிலிருந்த துணைவேந்தர்கள் ஓரளவிற்கு முதுகெலும்புடன் பணியாற்றியிருந்ததுடன் திரையரங்கு பக்கம் எட்டிப்பார்த்திராமையால் நடுவில் பதவியிழந்த பரிதாபமும் அரங்கேறியிருந்தது.

இந்நிலையில் வீர பிரதாபங்களுடன் பதவி கதிரையேறிய கலாநிதி .சிறீசற்குணராசா கதிரையினை தக்க வைக்க தற்போது போராடவேண்டியுள்ளது.

இதன் ஒரு அங்கமாக சிறீதர் திரையரங்கத்தின் யாழ்.பல்கலைக்கழக பிரதிநிதியான தோழர்.கோடீஸ்வரன் ருசாங்கன் என்பவரது ஆட்டத்திற்கு துணைவேந்தர் ஆடத்தொடங்கியுள்ளமை விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

அண்மையில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களிடையேயான பகிடிவதை மோதலினை பாரிய வன்முறையாக சித்தரிப்பதில் மும்முரமாகியிருப்பவர் குறித்த கோடீஸ்வரன் ருசாங்கன் என்பவரே.

இந்நிலையில் தனது தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்து தினவெடுக்க கலைப்பீடத்தை பற்றி விமர்சித்து வெளியிலிருந்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் துணைவேந்தர் ஒப்பமிட்டுள்ளமை அனைத்து மட்டங்களிலும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ஊடக அறம் பற்றியெல்லாம் விளக்கி விளாசியிருப்பது தான் நையாண்டியாகியுள்ளது.

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை முதல் இறுதியாக யாழில் அரங்கேற்றப்பட்ட சக்தி தேவா படுகொலை வரை முக்கிய சூத்திரதாரிகளாக ஈபிடிபியே இருந்திருந்தது.

இதனை அவ்வமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

குறிப்பாக உதயன் நாளிதழ் அலுவலக துப்பாக்கி சூட்டு விவகாரத்திலும் ஈபிடிபி பின்னணி அம்பலமாகியிருந்தது.

இவ்வாறு கடந்த கால வரலாற்றில் ஊடகப்படுகொலைகள் ஊடாக ஊடகங்களை அடக்க முற்பட்ட ஈபிடிபி முக்கியஸ்தர் ருசாங்கன் பூனை பால் குடிக்கும் ஊடக பாரம்பரியத்தில் தற்போது உபதேசங்களுடன் களமிறங்கியிருப்பதும் அதனை சில சில்லறைகள் காவி திரிவதும் கதையாகியுள்ளது.

இந்நிலையில் புதிதாக திரையரங்கில் ஞானஸ்தானம் பெற்ற கோடீஸ்வரள் ருசாங்கன் ஊடக ஒழுக்க நெறி பற்றி குரல் கொடுக்க தொடங்கியுள்ளமையும் அதற்கு துணைவேந்தர் பக்கப்பாடு பாடுவதுமே முக்கிய விடயமாகியிருக்கின்றது.

வழமையாக விசாரணை அறிக்கையொன்றை பரிசீலித்து உள்ளக ரீதியாக முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகளை அமுல்படுத்துவதே அலுவலகம் சார்ந்த நெறிமுறையாகும்.

ஆனால் அதனை விடுத்து கலைப்பீடத்தை இலக்கு வைத்து விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

விடுதலைப்புலிகளது பத்திரிகையில் முன்னர் பணியாற்றிய குறித்த நபர் பின்னர் வெளிநாடுகளிற்கு ஆட்களை அனுப்புவதில் மும்முரமாகியிருந்தார்.தற்போது டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகியதையடுத்து அவரது இணைப்பிற்கு இணைப்பு செயலாளராக உள்ளமை குறிப்பிடத்கதக்கது.