Oktober 8, 2024

அது மிருகத்தனமா? அல்லது இது மிருகத்தனமா? பாராளுமன்றில் கஜேந்திரன் கேள்வி?

அரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது. இந்த செயற்பாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.சுகாதார அமைச்சர் இந்த இடத்தில் இருப்பதால் அவருக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு தூரம் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அவர்களின் உறவுகளை நினைவுகூருவது என்பது ஆற்றுப்படுத்தும் செயற்பாடும்கூட. மருத்துவக் கோணத்தில் பார்த்தால் கூட, நினைவேந்தல்களுக்கு அனுமதித்திருக்க வேண்டும். வீடுகளுக்குள் சிறைப்படுத்தப்பட்ட ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த  அரசாங்கத்தி்ன் ஜனநாயகப் படுகொலையை நான் மீண்டும் வன்மையாகக் கண்டித்துப் பதிவு செய்வதோடு, 58 ஆம் ஆண்டு, 77 ஆம் ஆண்டு, 83 ஆம் ஆண்டு உங்களுடைய அரசு படுகொலைகளை மேற்கொண்ட போது, அதுக்கு எதிராக போராட முற்பட்டது மிருகத்தனமா? அல்லது எல்லாவற்றையும் செய்துவிட்டு அரசாங்கம் என்ற போர்வையில் அதை மூடிமறைத்துக்கொண்டு செயற்படுவது மிருகத்தனமா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுடைய அச்சுறுத்தல்களை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் தொடர்ந்து ஒடுக்கலாம் என்று நீங்கள் கனவு காணக்கூடாது.

அடுத்ததாக நேற்றைய தினம் கார்த்திகை விளக்கீட்டுக்காக விளக்குக் கொழுத்த முற்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் மட்டும் மல்ல பல பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் படையினரால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் கோப்பாய் காவல்துறை அதிகாரி யாழ் பல்கலைக்கழ மாணவன் முருகையை தர்சிகன் கார்த்திகை தின விளக்கீட்டுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். அது ஒரு மத நிகழ்வு என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாத இனவாதம் காவல்துறை அதிகாரிக்கு தலைக்கு மேல் ஏறிநிற்கின்றது. இதுதான் உங்களுடைய ஜனநாயகம்.