September 10, 2024

ஜனநாயகப் போராளிகளுக்கு சாட்டையடி!

இப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இருந்துள்ளார். அவரின் கையாட்களாக இருந்து முகாம் பராமரிப்பாளர்களாக இருந்தவர்கள் தான் இவர்கள்.

இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஒரு உருப்படியான எந்தவொரு வேலையையும் எந்த இடத்திலும் இவர்கள் செய்யவில்லை.
நீங்கள் கூறுவது போல 2009 ஆண்டு இவர்கள் இனம் தொியாத நபர்களாக வெளிக்கொண்டு வந்தவர்களாக இருந்தால் அவர்கள் இனம் தெரியாதவர்கள் தான் என்று கூறியுள்ளார் ரூபன் அவர்கள்.
ஜனநாயகப் போராளிகள் என்று கூறுபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என ஊடவியலாளர் கேள்வி எழுப்பியபோது அதற்கு வழக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய விடயம் ஒன்று.
1989 காலப்பகுதியில் அரசியற்துறைப் பொறுப்பாளராக கடமையாற்றியிருக்கிறேன். பின்னர் 1995 ஆண்டு திருகோணமலை மாவட்ட அரசியில் துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியிருக்கிறேன். 1996 – 2000 ஆண் வரை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுப் நிறுவனத்தின் பொறுப்பாளராக கடமையாற்றியிருக்கிறேன். 2001 – 2003 வரைக்கும் திரும்பியும் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக கடமையாற்றியிருக்கிறேன். 2005 ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டு இறுதி யுத்தம் வரைக்கும் போராட்டம் மௌனிக்கும் வரைக்கும்  தலைமைச் செயலகத்திற்கு பொறுப்பாக இருந்திருக்கிறேன்.
தலமைச் செயலகத்தில் செயற்பட்டு கொண்டிருந்த நான் என்றபடியால் ஒவ்வொருவருடைய செயற்பாடுகளையும் அறிந்து வைத்திருப்பேன். ஏனென்றால் அனைத்து போராளிகளுடைய செயற்பாடுகளும் தலைமைச் செயலகத்தின் ஊடாகவே நடைபெறும்.
அந்த வகையில் இப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இருந்துள்ளார். அவரின் கையாட்களாக இருந்து முகாம் பராமரிப்பாளர்களாக இருந்தவர்கள் தான் இவர்கள்.
இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஒரு உருப்படியான எந்தவொரு வேலையையும் எந்த இடத்திலும் இவர்கள் செய்யவில்லை.
நீங்கள் கூறுவது போல 2009 ஆண்டு இவர்கள் இனம் தொியாத நபர்களாக வெளிக்கொண்டு வந்தவர்களாக இருந்தால் அவர்கள் இனம் தெரியாதவர்கள் தான்.
இவர்கள் வசதி கிடைத்த இடத்தில் எல்லாம் இவர்கள் காசு வாங்கியிருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உண்டு. தேவை என்றால் ஆதாரங்களை நிரூபிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
இயகத்தில் எந்த வேலையைச் செய்திருந்தேன் என்பதை நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். இயகத்தில் நீங்கள் என்ன வேலை செய்தீர்கள் என்ற கேள்வியை துளசி, கதிர் போன்றவர்களிடம் கேட்டால் தமிழ்ச் செல்வனுக்குப் பின்னுக்கு நின்றோம் என்ற பதிலைத்தான் அவர்களால் கூறுமுடியும். நீங்கள் தான் அதற்கான பதிலையும் சொல்ல வேண்டும்.
இவர்கள் யாரென்று சொல்ல முடியாதவர்கள். வந்தாங்கள் போனாங்கள் என்று இருந்தவர்கள். மகிந்தவுடன் நிற்கிறார்கள், கோத்தாவுடன் இருக்கிறார்கள், சம்பந்தன் ஐயாவுடன் இருக்கிறார்கள். தலைமையை எற்கும் போது ஒரு தலைவனுக்கு கீழ் செயற்பட வேண்டும். நாட்டில் உள்ள அனைவரையும் தலைவனாக ஏற்றால் அவன் யாரென்பை நீங்கள் தான் விளங்கிக்கொள்ள வேண்டும்.
பாதாளத்திற்குள் விழுந்து கிடக்கின்ற சம்பந்தன் ஐயாவை தூக்கி விட இவர்கள் நினைகிறார்கள். ஜனநாயகப் போராளிகள் இன்று நிலைகொண்டுள்ள திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 43 வருடங்களாக 1977 ஆம் ஆண்டிருந்து இன்று 2020 ஆண்டு வரை சம்பந்தன் ஐயா அவர்கள் தான் அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
சம்பந்தன் ஐயா என்ன செய்தார் என்றால் திருகோணமலை மாவட்டத்தில் பெருபகுதியான மண்ணைப் பறிகொடுத்திருக்கிறார். தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இழக்க வைத்திருக்கிறார். இப்படியான சூழ்நிலைகளை எல்லாம் இவர் ஏற்படுத்தியிருக்கிறார்.
திருகோணமலை மாவட்டத்தில் 1947 ஆண்டு ஒரு தமிழ் பிரநிதித்துவம் இருந்த இடத்தில் இன்று நான்கு பாரளுமன்ற உறுப்பினர்கள். 2000 ஆம் ஆண்டு 2 முஸ்லிங்களும், 1 சிங்களவருமாக கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் சம்பந்தன் ஐயா தான் பெரிய ஆளாக அங்கு இருந்தவர்.
இவருடைய காலத்தில் தான் திருகோணமலை மாவட்டம் மண்ணையும் பறிகொடுத்து தமிழ் பிரதிநிதித்துவத்தையும் பறிகொடுத்தது. சம்பந்தன் ஐயாவிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் முதன்மை இடத்தில் இருந்த தமிழர்கள் எப்படி முஸ்லிங்களும் சிங்களவர்களும் அங்கு வந்து குடியேறி வந்தனர்? இதை சம்பந்ன் ஐயாவிடம் கேட்கவேண்டும் எப்படி கொண்டு வந்து சேர்த்தீர்கள் என்று?
அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவர்கள் கொழும்பிலும் இந்தியாவிலுமாக அங்கே தான் இருந்தவர். அவருக்கு திருகோணமலையில் என்ன நடக்குது என்று தெரியாது. அவரை கேட்டால் அவரும் தெரியாது என்று தான் சொல்வார். ஏனென்றால் அவருக்கு உண்மையாகத் தெரியாது.
ஆனால் அச்செயற்பாடு ஒரு திட்ட மிட்ட செயற்பாடாக இருக்கலாம். ஏனென்றால் நான் அங்கால போன பிறகு நீங்கள் இங்கே என்தையும் செய்யலாம் என்ற நிலைப்பாடும் அதில் இருந்திருக்கலாம்.
இவையெல்லாம் ஊகம் அல்ல. இவை எல்லாம் நிஜம்.
திருகோணமலை மாவட்டம் இவ்வாறு துன்பப்பட்டுகொண்டிருக்கிறது. 1977 ஆம் ஆண்டு முதல் அங்கு இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
3 முஸ்லிங்களும், ஒரு சிங்களவரும் 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றம் செல்ல வழிவகுத்தவர் சம்பந்தன் ஐயா. அவற்றுக்கெல்லாம் அவர் தான் நூறு சதவீதம் பொறுப்பு. அவருக்குத் தெரியும் எந்த இடத்தில் சறுக வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
இழந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் பிரத்தி நிதித்துவத்தைக் கொண்டுவர தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் 2001 ஆம் ஆண்டு வன்னியில் 8 மாவட்டத்தில் பொருண்மியத்திற்குப் பொறுப்பாக இருந்த என்னை திருகோணமலை மாவட்டத்திற்கு போ. தமிழ்ப் பிரத்திநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும். அதை செய்துபோட்டு வன்னிக்குத் திரும்பி வா என்று சொல்லி பொருண்மிய மேம்பாட்டு பொறுப்பிலிருந்து மாற்றி திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக அனுப்பியவர்.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் நடந்த தேர்தலில் சம்பந்தன் ஐயா தெரிவு செய்யப்பட்டவர். 2002 ஆம் ஆண்டு யூலை 11 ஆம் நாள் மாதம் துரைரட்ணம் மாஸ்டர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பி வைத்துவிட்டுத்தான் நான் வன்னிக்குத் திரும்பி போனனான். இவை எல்லாம் நடந்த உண்மைகள். இவற்றை எவராறும் மறுக்க முடியாது என்றார்.