September 9, 2024

புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
இதன்படி 6 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் ஒருவரை துணைவேந்தராக தேர்வு செய்ய வேண்டும். இதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவையில் உள்ளோர் வாக்களித்து தேர்வு செய்யும் முறைமை எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அதனை நடத்துவதற்காக மதிப்பீட்டாளர்கள் என நால்வர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து வருகை தர உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.