September 9, 2024

சிறையில் இருந்து பழைய சசிகலாவா வரமாட்டேன்… எனக்கு அந்த கட்சி தேவை! ஓதுங்கிடுங்க என எச்சரிக்கையாம்

பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா இந்த வருடம் முடியும் வரை வருவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும், நான் வெளியில் வரும் போது பழைய சசிகலாவாக இருக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சசிகலா அடுத்த மாதம் சிறையில் இருந்து வெளியில் வருவார் என்று கூறப்படுகிறது.

அப்படி இல்லை என்றாலும் அவர் தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் வெளியில் வந்துவிடுவார்.

இதற்கிடையில் டி.டி.வி தினகரன் மகளின் திருமணம் சசிகலா தலைமையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சசிகலா இந்த ஆண்டு, முடியும் வரை சிறையில் இருந்து வருவதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம்.

தற்போது, டி.டி.வி. தினகரன், திவாகரன், சுதாகரன், இளவரசி என சொந்த பந்தங்கள் பலர் ஒட்டுமொத்த அதிமுகவையும் மிரட்ட, சசிகலா அந்த மிரட்டெலுக்கெல்லாம் தலைமை தாங்க என முன்பு இருந்த சூழலை விட்டு முழுவதுமாக வெளியே வர சசிகலா தீர்மானித்துள்ளார்.

இது குறித்து மன்னார்குடி வட்டாரம் கூறுகையில், எனக்கு அதிமுக என்கிற கட்சிதான் முக்கியம். அந்த கட்சியின் வளர்ச்சிக்கு எதிராக எனது சொந்த பந்தங்கள் இருப்பதாக பொதுமக்கள் நம்புகிறார்கள்.

எனவே நீங்கள் எல்லோரும் உங்களிடம் இருக்கக்கூடிய பணத்தை வைத்துக்கொண்டு ஒதுங்கியிருங்கள் கட்டளையிட்டுள்ளார்.

 

அதன் காரணமாகவே, சசிகலாவின் சொந்த பந்தங்கள் தினகரன் உட்பட யாரும் பொதுவெளியில் பேச மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே, ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரே சசிகலா கட்டிவரும் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி அரசு பில்டிங் அனுமதி தரவில்லை. அந்த வீட்டு கட்டுமானத்தையும் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என சசிகலா கூறிவிட்டாராம்.