September 9, 2024

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

 யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதன்படி இன்று 145பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் -4 பேர் போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 7 பேர் ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை-ஒருவர் பொது வைத்தியசாலை மன்னார் – 3பேர் தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை- 30 பேர்(13 பேருக்கு தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ) கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு-30 பேர் கிளிநொச்சி நாச்சிக்குடா எழுமாற்றுத்தெரிவு – 30பேர் இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் பூவரசங்குளம் -40 பேர்(ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது)