September 16, 2024

மூன்றாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்தில் இலங்கை! தகவல்களை மறைத்த அரசாங்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட அரசாங்கத்தின் தவறே காரணம் என தெரியவந்துள்ளது.

அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் சமூக கட்டுப்பாடுகளை தளர்த்து நடவடிக்கை மேற்கொண்டால் இரண்டாவது அலை அல்ல மூன்றாவது அலையும் ஏற்பட கூடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தியதாக அரசாங்கம் தொடர்ந்து கூறி வந்த போதிலும் அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை. இன்று நாட்டின் பல பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் சில இடங்கள் தொடர்பில் தகவல் வெளியிடாமல் மறைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அலையை மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சங்கத்தின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.