September 9, 2024

தப்பி ஓடும் கூட்டமைப்பு தலைவர்கள்?

ஏற்கனவே மக்களை தனித்து சந்திக்க பின்னடித்து வரும் கூட்டமைப்பு தற்போது பொது விவாதங்களிலும் காய் வெட்ட தொடங்கியுள்ளது.
இன்று பி.ப 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் எம்.ஏ.சுமந்திரன்  மற்றும் முன்னணியின்  சுகாஸ், மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் பங்கெடுக்கும் பொது விவாதமொன்றிற்கு ஏற்பாடாகியிருந்தது.
எனினும் தனக்கு சம அந்தஸ்துள்ள அரசியல் தலைவர்கள் இல்லையென தெரிவித்து இறுதி நேரத்தில் எம்.ஏ.சுமந்திரன் பின்வாங்கியுள்ளார்.
தொலைக்காட்சி நிறுவனமொன்றால் ஏற்பாடாகியிருந்த நிகழ்வே இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே வன்னி வேட்பாளர்களுடனான தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கெடுக்காது இடையில் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறிய சம்பவமும் நடந்திருந்தது.