Mai 26, 2024

கொரோனா என்பது தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு சாதகமான சூழல்-அனந்தி

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற எண்ணப்பாங்கில் பலவகையான வேலைதிட்டங்களை முன்னெடுப்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது    என்று பாராளுமன்ற வேட்ப்பாளரும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி  சசிதரன் அவர்கள்

அவர்  மேலும்  உரை ஆற்றுகையில் அரச உத்தியோகத்தர் வாக்கு ஒரு மாற்றத்தை உண்டு பன்ணி இருக்கின்றது இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைபில் இருந்து கொள்கைரீதியாக முரன்பட்டு வெளியேறியவர்கள் இந்த அணியில் அதிகமாக உள்ளோம்

அவர்கள் மக்களுக்கு ஒரு கருத்தை கூறிவிட்டு அரசுடன் இணக்கப்பாட்டுக்கு சென்றதன் காரணமாகநாங்கள் கட்சிக்குள் இருந்து கொண்டே விமர்சித்தவர்கள் இன்று மக்கள் மத்தியில் அவர்களது முகத்திரைகள் கிழிக்கப்பட்ட நிலையில் தாங்கள் இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற எண்ணப்பாங்கில் பலவகையான வேலைதிட்டங்களை முன்னெடுப்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது

நேற்றய தினம் இந்த இடத்திற்கு நான் வந்திருந்த போது ஒரு முன்நாள் போராளியாகவும் காணாமலாக்கப்பட்ட வீட்டிற்குள் சென்று பொலீசார் தாக்குதல்நடாத்தியதாகவும் அவர் வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிருக்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினரது வலது கையாக திகள்கின்ற பிரதேச சபையினுடய தவிசாளருடய முரன்பாடு காரணமாக தான் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் அந்த பேட்டியில் கொடுத்திருக்கின்றார்

அது எவ்வளவு மோசமான செயல் இந்த மண்ணில் பெண்கள் சாமத்தில் மிகத்துணிச்சலாக தைரியமாக நடமாடிய இந்த மண்ணில் இவ்வாறான பெண்களுக்கெதிரானவன்முறையாளர்கள் தங்களுடய அரசியல் போர்வைக்குள் நின்று பெண்களை சித்திரவதைப்படுத்துவதென்பது மிகவும் வருந்தத்தக்கது

இதை தட்டிக்கேட்க இப்பொழுது இங்கே யாரும் இல்லை தனித்து வாழும் ஒரு பெண் இங்கே நசுக்கப்படுகிறார்கள் என்றால் ஒட்டுமொத்த பெண்களும் அவர்களுக்காய்குரல்கொடுக்கவேண்டும் இது ஒரு பெண் தலைமைத்துவத்திற்கு வந்த பிரச்சினை என நினைத்து மௌனமாக இருந்தால் நாளை உங்கள் வீட்டு பெண்கள் மீதும்இவர்கள் கைவைக்கத்துணிவார்கள் எனவே கேள்வி கேட்பவர்களாக நீங்கள் இருக்கவேண்டும்.

இந்த பூமியில் பல துன்ப துயரங்களைக்கடந்து மீண்டெழ முடியாமல் இருக்கும் இவ்வாறானவர்கள் மீது ஒரு அரசியல் அங்கீகாரத்தைப்பெற்றுக்கொண்டு இவாறான வன்முறைகள் பல வெளிவராதசம்பவங்கள் நிறைய நிகள்துள்ளது

இயவற்றையெல்லாம் இந்த சமூகமுகத்தாலும் மக்கலாலும் தட்டிக்கேட்கப்படவேண்டும் நாங்கள் இன்று பாராளுமன்ற தேர்தலை சுயாதீனமாக சந்திப்பதாக கூறிக்கொண்டாலும் இரானுவ அடக்குமுறைக்குள் இரானுவசோதனைச்சாவடிகளுக்குள் தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றோம் பல இடங்களில் இடைமறிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுத்தான் இந்தஅரங்கில் வந்து பேசிக்கொண்டிருக்கின்றோம்

கொரோனா என்ற ஒரு சாட்டை வைத்து முற்று முழுதாக எங்களது தேர்தல் பிரச்சாரத்தை முடக்குகின்ற எங்களோடு வந்து இணைகின்ற இளைஞர் யுவதிகளைதடுக்கின்ற கட்டுப்படுத்துகின்ற செயற்பாடாகவே இதை பார்க்கின்றோம் இந்த அரங்கில் நான் நுளைகின்ற போது பல புலனாய்வாளர்கள் நிற்பதையும் நான் அவதானித்திருந்தேன் நாம் இன்னமும் உங்களை ஒரு அடக்குமுறைக்குள் வைத்திருக்கின்றோம் நீங்கள் எங்களை மீறி எதையும் செய்துவிட முடியாது என்று காட்டும் அச்சுறுத்தலாகவேஇதை பார்க்கின்றோம்.

இந்த கொரோனா என்பது தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு சாதகமான சூழலாக உள்ளது காரணம் ஆயுத முனையில் நிற்கும்படையினரால் எப்படி கொரோனா நோயினை தடுக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

இவையெல்லாம் எங்களை அச்சுறுத்துகின்ற எங்களை இரானுவ முற்றுகைக்குள் வைத்திருக்கின்ற செயற்பாடே ஆகும்இந்த தேர்தலில் மக்கள் அதிகளவில் வாக்களிக்கக்கூடாது என்பதற்காக பல தடை நடவடிக்கைகளை அரசபடைகள் ஏற்படுத்தலாம் எனவே மக்கள் காலையிலேசுயபாதுகாப்புடன் கூடிய சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு ஜனநாயக பண்புள்ள கட்சியாய் தமிழ்மக்கள் தேசியக்கூட்டணி ஆகிய நாங்கள் மீன் சின்னத்தில்போட்டியிடுகின்றோம் எங்களுக்கு வாக்களித்து மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்குமாறு கோரி நிற்கின்றேன்  என்றும் அவர் அங்கு  தெரிவித்தார்