April 27, 2024

பிரான்சில் ஜூலை மாத இறுதி வரை மற்றொரு சிவப்பு எச்சரிக்கை!

உலகம் முழுவதிலும் கொரோனா தொடர்பில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என எச்சரிக்கைகள் விடுப்பட்டுள்ள நிலையில், பிரான்சில் ஒவ்வாமை என்னும் அலர்ஜி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் காரணமாக பிரான்சில் அலர்ஜி சீசன் நீடித்துள்ளதாக நிபுணர்

ஒருவர் எச்சரித்துள்ள நிலையில், அலர்ஜிக்கான அறிகுறிகளும் கொரோனாவுக்கான அறிகுறிகளும் முற்றிலும் வித்தியாசமானவை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பிரான்சில் தேசிய காற்று ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள வரைபடம் ஒன்று, கிட்டத்தட்ட பிரான்ஸ் முழுவதுமே மகரந்த அலர்ஜி எச்சரிக்கை பகுதிகளாக இருப்பதைக் காட்டுவதை காணமுடிகிறது.

வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் மகரந்த துகள்களின் எண்ணிக்கை ’மிக அதிகம்’ இருக்கும் என்பதையும், ஆரஞ்சு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் ’அதிகம்’ என்பதையும் காட்டுகின்றன.

இந்த புல்லிலிருந்து வெளியாகும் மகரந்த துகள்கள் ஜூலையின் மையப்பகுதி அல்லது ஜூலை மாத இறுதி வரை நீடிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.